Good Night Bible verses In Tamil | குட் நைட் பைபிள் வசனங்கள்

Good Night Bible verses In Tamil

சங்கீதம் 4:8:- “நான் படுக்கைக்குச் சென்று சமாதானமாய் உறங்குகிறேன்.
    ஏனெனில், கர்த்தாவே, நீர் என்னைப் பாதுகாப்பாய் தூங்கச் செய்கிறீர்”

ஏசாயா 26:9:- “இரவில் எனது ஆத்துமா உம்மோடு இருக்க விரும்புகிறது.
என்னுள் இருக்கிற ஆவி ஒவ்வொரு புதிய நாளின் அதிகாலையிலும் உம்மோடு இருக்க விரும்புகிறது. தேசத்திற்கு உமது நீதியின் பாதை வரும்போது,
ஜனங்கள் வாழ்வின் சரியான பாதையைக் கற்றுக்கொள்வார்கள்”

நீதிமொழிகள் 3:24- 26:- “நீ படுத்திருந்தாலும் பயப்படவேண்டாம். நீ ஓய்வாக இருந்தால் உன் தூக்கம் சமாதானமாக இருக்கும். திடீரென உனக்கு ஏற்படுகின்ற அழிவுக்கு பயப்படாதே. தீய ஜனங்கள் என்ன செய்வார்களோ என்று பயப்படாதே. ஏனென்றால் கர்த்தர் உனக்குப் பெலன் தந்து கண்ணியிலிருந்து உன்னை விலக்கிக் காப்பார்”

சங்கீதம் 121:4:- “இஸ்ரவேலின் பாதுகாவலர் தூங்குவதில்லை. தேவன் ஒருபோதும் உறங்கார்”

சங்கீதம் 19:1-2:- “வானங்கள் தேவனுடைய மகிமையைக் கூறுகின்றன.
    தேவனுடைய கரங்கள் செய்த நல்ல செயல்களை ஆகாயங்கள் அறிவிக்கின்றன.
ஒவ்வொரு புதுநாளும் அந்தக் கதையை மேலும் கூறும். ஒவ்வொரு இரவும் தேவனுடைய வல்லமையை மேலும் மேலும் உணர்த்தும்”

யோபு 33:15-17:- “தேவன் கனவில் ஜனங்களோடு பேசலாம், அல்லது இரவில் அவர்கள் ஆழ்ந்த நித்திரைக் கொள்ளும்போது தரிசனம் தந்து பேசலாம், அவர்கள் தேவனுடைய எச்சரிக்கையைக் கேட்கும்போது மிகவும் அச்சம்கொள்ளலாம். ஜனங்கள் தவறு செய்வதை நிறுத்தவும் பெருமைகொள்வதை விடவும் தேவன் எச்சரிக்கை செய்கிறார்”

சங்கீதம் 42:8:- “ஒவ்வொரு நாளும் கர்த்தர் தமது உண்மை அன்பை வெளிப்படுத்துகிறதினால் ஒவ்வொரு இரவும் அவரது பாடல்களை நான் பாடுகிறேன். ஜீவனுள்ள தேவனிடம் நான் ஜெபிக்கிறேன்”

சங்கீதம் 8:3:- “கர்த்தாவே, உமது கைகளால் நீர் செய்த வானங்களை நான் கண்டேன்.
நீர் படைத்த நிலாவையும், நட்சத்திரங்களையும் நான் கண்டு ஆச்சரியமடைந்தேன்”

சங்கீதம் 127:2:- “வாழ்க்கை வாழ்வதற்காக காலையில் எழுவதும் இரவில் வெகுநேரம் விழித்திருப்பதும் பொழுதை வீணாக்குவதாகும்.தேவன் தாம் நேசிக்கிற ஜனங்களை அவர்கள் உறங்கும்போது கவனித்துக் காக்கிறார்”

ஆமோஸ் 5:8:- “நீங்கள் உதவிக்காகக் கர்த்தரிடம் போக வேண்டும்.தேவன் நட்சத்திரக் கூட்டங்களைப் படைத்தார்.அவர் இருளைக் காலை ஒளியாக மாற்றுகிறார்.
அவர் பகல் ஒளியை இரவின் இருளாக மாற்றுகிறார்.அவர் கடலிலுள்ள தண்ணீரை அழைத்து, அதனை பூமியில் ஊற்றுகிறார்.அவரது நாமம் யேகோவா.அவர் ஒரு பலமான நகரைப் பாதுகாப்பாக வைத்து இன்னொரு பலமான நகரை அழிய விடுகிறார்”

ரோமர் 13:12:- “இரவு” ஏறக்குறைய முடிந்து போனது. “பகல்” அநேகமாக முளைக்கத் தொடங்கி விட்டது. எனவே இருட்டுக்குச் சொந்தமான செயல்களை விட்டுவிடுவோம். வெளிச்சத்தின் ஆயுதங்களை அணிந்துகொள்வோம்”

சங்கீதம் 16:7:- “எனக்கு நன்கு போதித்த கர்த்தரைத் துதிப்பேன். இரவில் என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து இந்த ஆலோசனைகள் வருகின்றன”

சங்கீதம் 17:3:- “நீர் என் இருதயத்தின் ஆழத்தைப் பார்த்தீர்.இரவு முழுவதும் என்னோடிருந்தீர். என் இருதயத்தை ஆராய்ந்து என்னில் ஒரு குற்றத்தையும் நீர் காணவில்லை.நான் எந்தத் தீய செயல்களையும் திட்டமிடவில்லை”

சங்கீதம் 63:6:- “என் படுக்கையில் நான் உம்மை நினைவு கூருவேன்.
நள்ளிரவிலும் உம்மை நான் நினைவு கூருவேன்”

சங்கீதம் 119:148:- “உமது வார்த்தைகளைக் கற்பதற்கு இரவில் வெகுநேரம் நான் விழித்திருந்தேன்”

பிரசங்கி 5:12:- “ஒருவன், பகல் முழுவதும் கடுமையாக உழைத்தால் இரவில் சமாதானமாகத் தூங்குகிறான். அவனுக்கு உண்பதற்கு மிகுதியாக உள்ளதா குறைவாக உள்ளதா என்பதைப்பற்றிக் கவலையில்லை. ஆனால் செல்வந்தன் தன் செல்வத்தைப்பற்றிக் கவலைபட்டுக்கொண்டு தூங்காமல் இருக்கிறான்”

Attention:- If You Need More Details About GoodNight Then You Check Out Our English PageGoodNight Bible VerseWith Images

More Tamil Bible Topic


Friendship Bible Verses In Tamil

[Best] 24+Friendship Bible Verses In Tamil | நட்பு பைபிள் வசனங்கள்

யோபு 6:14:-"ஒருவனுக்குத் தொல்லைகள் நேர்கையில், அவனது நண்பர்கள் அவனிடம் இரக்கமாயிருக்கட்டும். ஒருவன் அவனது நண்பனிடம், அவன் சர்வ வல்லமையுள்ள தேவனிடமிருந்து விலகிச்சென்றால் கூட, நம்பிக்கைக்குரியவனாக நடந்துக்கொள்ளட்டும்" நீதிமொழிகள் 18:24:-"பேசிச் ...
Read More
Bible Verses About Grace In Tamil

[Best] 19+Bible Verses About Grace In Tamil | கடவுள் பரிசு கிரேஸ் பைபிள் வசனம்

வெளி 22:21:-"கர்த்தராகிய இயேசுவின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக" எபிரேயர் 4:16:-"எனவே, நமக்குத் தேவைப்படும் சமயத்தில் தேவனுடைய கிருபையும் இரக்கமும் நமக்குக் கிடைக்கும் வகையில் கிருபை உள்ள ...
Read More
Eternal Life Bible Verses In Tamil

[Best] 19+Eternal Life Bible Verses In Tamil | நித்திய வாழ்க்கை பைபிள் வசனங்கள்

1 தெசலோனிக்கேயர் 5:8:-"ஆனால் நாம் பகலுக்குரியவர்கள். எனவே நம்மை நாமே கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். நம்மைக் காத்துக்கொள்வதற்காக விசுவாசம், அன்பு என்னும் மார்புக் கவசத்தை அணிந்துகொள்வோம். நம் தலைக்கவசமாய் ...
Read More
Holy Bible Verses In Tamil

[Best] 19+ Holy Bible Verses In Tamil | புனித பைபிள் வசனங்கள்

1 பேதுரு 1:15-16:-"உங்களை அழைத்த தேவன் பரிசுத்தமானவர். ஆதலால் நீங்களும் நீங்கள் செய்கிற ஒவ்வொரு காரியத்திலும் பரிசுத்தமானவர்களாக இருங்கள். வேதவாக்கியங்களில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. “நான் பரிசுத்தராக இருப்பதால், ...
Read More
Thanks Giving Bible Verses In Tamil

[Best] 20+Thanks Giving Bible Verses In Tamil | கடவுளுக்கு நன்றி

சங்கீதம் 106:1:-"கர்த்தரைத் துதியுங்கள்! கர்த்தர் நல்லவர், எனவே அவருக்கு நன்றி கூறுங்கள்!தேவனுடைய அன்பு என்றென்றைக்குமுள்ளது" 1 தெசலோனிக்கேயர் 5:18:-"தேவனுக்கு எப்பொழுதும் நன்றி செலுத்துங்கள். இயேசு கிறிஸ்துவில் இதையே ...
Read More
bible verses about strength In Tamil

[Best] 20+Bible Verses About Strength In Tamil | பைபிளில் வலிமை

பிலிப்பியர் 4:13:-"கிறிஸ்துவின் மூலம் எனக்கு எல்லாவற்றையும் செய்ய வலிமை இருக்கிறது. ஏனென்றால் அவர் எனக்குப் பலத்தைக் கொடுக்கிறார்" ஏசாயா 41:10:-"கவலைப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன்.பயப்படாதே, நான் உனது ...
Read More
Bible Verses About Marriage In Tamil

[Best] 20+Bible Verses About Marriage In Tamil | திருமணத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

ஆதியாகமம் 2:18:-"மேலும் தேவனாகிய கர்த்தர், “ஒரு ஆண் தனியாக இருப்பது நல்லதல்ல, எனவே அவனுக்கு உதவியாக அவனைப்போன்று ஒரு துணையை உருவாக்குவேன்” என்றார்"எபிரேயர் 13:4:-"திருமணம் என்பது அனைவராலும் ...
Read More
Bible Verses About Healing In Tamil

[Best] 30+Bible Verses About Healing In Tamil |பைபிள் வசனங்களை குணப்படுத்துதல்

எரேமியா 33:6:- "ஆனால் பிறகு அந்நகரில் உள்ள ஜனங்களை நான் குணப்படுத்துவேன் (மன்னிப்பேன்). அந்த ஜனங்கள் சமாதானத்தையும் பாதுகாப்பையும் அனுபவிக்கும்படிச் செய்வேன்" ஏசாயா 53:5:- "ஆனால், நாம் ...
Read More
Bible Verses About Death In Tamil

Bible Verses About Death In Tamil | மரணம் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

ரோமர் 14:8:- "நாம் அனைவரும் வாழும்போது கர்த்தருக்காகவே வாழ்கிறோம். சாகும்போது கர்த்தருக்காகவே சாகிறோம். வாழ்வதானாலும் சரி, சாவதானாலும் சரி நாம் கர்த்தருக்குச் சொந்தம் ஆனவர்கள்" பிரசங்கி 12:7:- ...
Read More
Motivationl Bible Quotes In Tamil

[Best]26+Motivational Bible Quotes In Tamil With Images Share Your Friend

நாம் மனிதர்கள் என்பதால், நம் வாழ்க்கையில் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. குறிப்பாக ஒருவர் பைபிள் அடிப்படையிலான வாழ்க்கையை வாழும்போது பிரச்சினை அதிகரிக்கிறது, ஏனென்றால் சாத்தான் தொடர்ந்து ...
Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top